/* */

திமுக எம்பி ரமேஷை ஒரு நாள் காவலில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க நீதிபதி அனுமதி

நீதிபதி அனுமதி அளித்த நிலையில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

HIGHLIGHTS

திமுக எம்பி ரமேஷை ஒரு நாள் காவலில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க நீதிபதி அனுமதி
X

கடலூர் மாவட்டம் முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த இந்த வழக்கில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி காலை பண்ருட்டி குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் அவரை அக்டோபர் 13ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கற்பகவள்ளி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்ற காவலில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை கடலூர் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். அப்போது அவரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை அனுமதி கோரியிருந்த நிலையில், ஒருநாள் காவலில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த நீதிபதி பிரபாகரன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது கடலூர் சிபிசிஐடி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி மற்றும் 3 ஆய்வாளர்கள் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 Oct 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!