/* */

'நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்'- திருமாவளவன்

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்’- என்று திருமாவளவன் கடலூரில் பேட்டி அளித்தார்.

HIGHLIGHTS

நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்- திருமாவளவன்
X
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர்கள் ஆங்காங்கே பிரச்சாரத்தில் ஈடுபட கூடிய நிலையை எட்டியிருக்கிறது. கடலூர் புதிதாக மாநகராட்சியாக பரிணாமம் பெற்றிருக்கிறது. இந்த மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று இடங்களில் போட்டியிடுகிறது. 2 தனி வார்டிலும் ஒரு பொது வார்டிலும் போட்டியிடும் வாய்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் பெற்றுள்ளது.

இவர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது

தமிழகமெங்கும் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. கூட்டணி தேர்தலுக்கு முன்பே சிதறி விட்டது. பா.ஜ.க. ஒருபுறம் பா.ம.க. ஒருபுறம் அ.தி.மு.க. ஒரு புறம் என்று அவர்கள் தனித்தனியே தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தி.மு.க. கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் எவ்வாறு சந்தித்ததோ அதைப்போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கிறது. 21 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். அதேபோல நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் கைப்பற்றக் கூடிய அளவுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பும் செல்வாக்கும் இந்த கூட்டணிக்கு உள்ளது.

சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தை கூட்டி கடந்த 8ஆம் தேதி முதல்வர் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நம்புகிறோம்.

மாநில அரசுக்கான அதிகாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஒத்திசைவு துறைகளில் மாநில அரசுகள் சட்டம் இயற்றினால் அந்த சட்டத்தை எவ்வாறு சட்ட மசோதாவை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற கேள்வி இப்போது விவாதம் ஆகியிருக்கிறது.

ஒத்திசைவு பட்டியலில் ஒன்றிய அரசு சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம் என்பதுதான் இப்போது நடைமுறையில் இருந்து வருகிறது அதில் மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் வழங்க அவர்கள் தயங்குகிறார்கள் என்பது தான் இப்போது நீட் விளக்கு மசோதாவை ஏற்க மறுப்பதன் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு திருப்பி அனுப்புகிற அதிகாரம் உண்டு எந்த அடிப்படையில் என்றால் அந்த மசோதாவில் திருத்தம் கோர வேண்டும் அல்லது விளக்கம் கோர வேண்டும் என்ற அடிப்படையில் திருப்பி அனுப்பலாம் தற்போது ஆளுநர் அவர்கள் அந்த நீட் மசோதாவை திருப்பி அனுப்பவில்லை நிராகரித்திருக்கிறார்.

அதனை நிராகரிக்க கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை ஆகவே ஆளுநர் அதிகார வரம்பு மீறல் செய்திருக்கிறார் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகிறது. இந்த முறை நிறைவேற்றப்பட்டு இருக்கிற இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக வலியுறுத்துகிறோம் என்றார்.

Updated On: 13 Feb 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  8. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  9. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்