கடலூர் அருகே அதிகரிக்கும் கடல் ஆமைகள் இறப்பு
கடலூர் வெள்ளி கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் அதிகளவில் இறந்து கிடக்கின்றன.
HIGHLIGHTS

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி ஆமைகள் வருவது வழக்கம்.
தமிழகக் கடலோரப் பகுதிகளில் இந்த ஆண்டு பெய்த தொடர்மழை மற்றும் அதிக அளவு நீரோட்ட தாக்கத்தால் ஆமைகள் முட்டை இட வருவது தாமதமானது. இந்நிலையில் முட்டை இடுவதற்காக கடற்கரை வரும் ஆமைகள் சில படகுகளிலும், மீனவர் வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.
இந்த ஆண்டு இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில் கடலூர் சில்வர் கடற்கரை முதல் ராசா பேட்டை கடற்கரை வரை 30க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்துள்ளன. இதைத் தடுக்காவிட்டால் ஆமைகளின் இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மீனவர்களின் நண்பனாக விளங்கும் ஆமைகளை காக்க மீனவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இறந்த ஆமைகளை கணக்கெடுத்து இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவை கடற்கரைகளில் புதைக்கப்பட்டு வருகின்றன.