கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது,

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
X

கடலூர் மாவட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்தர ரெட்டி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர ரெட்டி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் ‌ அனைத்து துறை அதிகாரிகளுக்கு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இயற்கை பேரிடர்கள் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்றான கடலூர் மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு இக்கூட்டத்தில் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் 92 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவை என கண்டறியப்பட்டு மழை நீர் வடிய வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் என்.எல்.சி. நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் சுரங்கத்தில் தேங்கிய நீரை முழுமையாக வெளியேற்ற கூடாது எனவும், மழை குறைந்த பிறகு ஆறுகள் மற்றும் ஏரிகளில் படிப்படியாக நீரை வெளியேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் தலைமைச் செயலர் பணீந்தர ரெட்டி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


Updated On: 6 Oct 2021 3:33 PM GMT

Related News