கடலூரில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் விழா

கடலூர் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடலூரில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் விழா
X

கடலூரில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் விழா பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

பாரதீய ஜன சங்கம் அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் முதன்மையானவரான பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாள் விழா பா.ஜ.க. சார்பில் கொண்டாடப்பட்டது. கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.சார்பில் கடலூர் பேருந்து நிலையம் அருகே சுமங்கலி சில்க்ஸ் கார்னரில் நடைபெற்ற இந்த விழாவில் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயாவிற்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் தீனதயாள் உபாத்யாயா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் விஜயரங்கன்,பந்தல் பரசுராமன்,மணி, இந்திரஜித், குணா, தாமோதரன், இளையராஜா வெங்கடேசன் ,பாபு ,பத்மினி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2021 5:42 PM GMT

Related News