/* */

தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி ரமேஷ் ஜாமின்மனு மீது விசாரணை ஒத்திவைப்பு

தொழிலாளி கொலை வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்பி ரமேஷின் ஜாமீன்மனு மீதான விசாரணை, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி ரமேஷ் ஜாமின்மனு மீது விசாரணை ஒத்திவைப்பு
X

கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி ரமேஷ்

கடலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராசு என்பவர் 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் 19-ம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு, கடலூர் எம்.பி. ரமேஷ் தான் காரணம் எனக்கூறி, கோவிந்தராசுவின் உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, கோவிந்தராசுவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளிவந்ததை தொடர்ந்து விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீசார், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். அவர்களில் ரமேஷ் தவிர 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இரண்டு நாட்கள் தலைமறைவாக இருந்த திமுக எம்பி ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடந்தார். பின்னர் கடலூர் குற்றவியல் தலைமை நீதிமன்றம், எம்பி ரமேஷிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டதோடு, வரும் 27ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து, எம்பி ரமேஷ் கடந்த 11ஆம் தேதி கடலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை, கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட கோவிந்தராசு தரப்பில் இருந்து, தடை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை, நாளை ஒத்திவைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதேபோல, முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கு தொடர்பாக, விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திமுக எம்பியின் உதவியாளர் நடராஜன், அல்லா பிச்சை, கந்தவேல், வினோத், சுந்தரராஜன் ஆகிய 5 பேர், 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவபழனி, ஐந்து பேருக்கும் மேலும் ஒருநாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரணை நாளை நடைபெறும் நிலையில், கொலை வழக்கு தொடர்பாக எம்பி உதவியாளர் நடராஜன் உள்ளிட்ட ஐந்து பேரையும், இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க, மனு கோரப்பட்டுள்ளது.

Updated On: 22 Oct 2021 10:53 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...