/* */

எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேட்டி

நெல் கொள்முதல் பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியது பொய் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

HIGHLIGHTS

எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேட்டி
X

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த அ.தி.மு..க ஆட்சியை விட இந்த ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 68 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 114 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி அதன் காரணமாக விவசாயிகள் இடைத்தரகர்கள், தனியார்கள் விற்பனை செய்யாமல் அரசு கொள்முதல் நிலையங்களில் நாடி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு அ.தி.மு.க .ஆட்சியில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து இருந்த நிலையில் இதுவரையில் தற்போது குறுவை சாகுபடியில் 64 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் மழையில் நனைந்து சேதம் அடையக் கூடாது என்பதற்காக உணவுத்துறை அமைச்சருடன் இணைந்து 20 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு அவற்றை அரிசி ஆலைகளுக்கு அனுப்பி அரைத்து அரிசியாக்கி சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி அறிக்கைகள் விடும் முன் உண்மை தன்மை அறிந்து அதற்கேற்றவாறு அறிக்கை தரவேண்டும். அவர் கூறுவதெல்லாம் வடிகட்டிய பொய்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 21 Sep 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு