/* */

குறை தீர் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்- எச்சரித்த துணை ஆட்சியர்

கடலூர் மாவட்ட மக்கள் குறை கேட்பு கூட்டத்தை அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்ததால் துணை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

HIGHLIGHTS

குறை தீர் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்- எச்சரித்த துணை ஆட்சியர்
X

கடலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் துணை ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் நடந்தது.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் அனைத்துத்துறை மாவட்ட அதிகாரிகள் அல்லது இரண்டாம் நிலை அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பது விதி.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று துணை ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியிலுள்ள மக்கள் தங்களது அடிப்படை பிரச்சினைகளை தெரிவித்தால் துறை சார்ந்த அதிகாரிகளிடமும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்த பொதுமக்கள் துணை ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற துணை ஆட்சியர் ரஞ்சித் சிங் துறை ரீதியான விளக்கங்களை அந்தந்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் பதில் கூறமடியாமல் திகைத்து நின்றனர், துணை ஆட்சியர் ரஞ்சித் சிங் விசாரித்த போது தான் தெரிந்தது குறைகேட்பு கூட்டத்திற்கு வந்தது மாவட்ட அதிகாரிகள் முதல் நிலை அலுவலர்கள் அல்ல, கடைநிலை ஊழியர்கள் என அதிர்ச்சியடந்த துணை ஆட்சியர் யார் யாரெல்லாம் இதுபோன்று அதிகாரிகளுக்கு பதிலாக வந்திருக்கிறார்கள் என கேட்டார். அப்போதுதான் தெரிந்தது பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடைநிலை ஊழியர்களை அனுப்பி மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்க வைத்தது தெரியவந்தது.

இங்கு கூட்டம் எதற்காக நடக்கிறது? உங்களை யார் அனுப்பியது என அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்த துணை ஆட்சியர் ரஞ்சித் சிங் கேள்விக்கு மௌனமே பதிலாக அலுவலர்கள் நின்றிருந்தனர்.

மேலும் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்களும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கூட்டத்திற்கு வந்ததாக தெரிவித்தனர், கூட்டத்திற்கு வந்த அலுவலர்களையும் துறை ரீதியான அதிகாரிகளையும் கடிந்து பேசிய துணை ஆட்சியர் அலுவலர்களை எச்சரித்தார்.

Updated On: 8 Nov 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்