கடலூர்:மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு

மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு சார்பில் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கடலூர்:மாரிதாஸ் மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு
X

கடலூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் மாரிதாஸ் மீது தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்புவது போன்று, போலியாக தயாரித்து, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஒரு வீடியோவை மாரிதாஸ் என்பவர் வெளியிட்டுள்ளார்.இந்த செய்தி போலியானது, இதை யாரும் நம்ப வேண்டாம் என்று அந்த தனியார் தொலைக்காட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் அங்கு அந்த வீடியோவை நீக்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ அவர் முன்வரவில்லை. எனவே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வரும் மாரிதாஸ் மீதும், அவரது குழுவினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 27 Sep 2021 11:49 AM GMT

Related News