/* */

கடலூரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கடலூரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
X

கடலூர் தலைமை தபால் நிலையம் முன் மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது.

வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் பல அமைப்புகள் இன்று நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தொழிலாளர் நல சட்ட தொகுப்பை திரும்பப் பெறவேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் ,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, பெட்ரோல், டீசல், கியாஸ் மீதான கலால் வரி நீக்கி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக உயர்த்தி சம்பளத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு தலைமை தபால் நிலையத்தை சி,பி,எம், கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட முயன்றனர், ஆனால் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை கண்ட போராட்டக்காரர்கள் கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On: 27 Sep 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்