/* */

கடலூர்: கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கடலூர்: கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
X

கடலூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழக மக்களை கொரோனா மூன்றாம் அலை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை முழு அளவில் செயல்படுத்தும் விதமாக கடந்த 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 28 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று மாபெரும் அளவில் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக இன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் பேருந்து நிலையங்கள்,இரயில் நிலையங்கள், அங்களிவாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 640 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிளையும், புவனகிரி வட்டம் பி.உடையூர் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமிளையும் குறிஞ்பாடி வட்டம் வழுதலம்பட்டு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிளையும் மாவட்ட கலெக்டர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், மாவட்ட‌ மலேரியா அலுவலர் கணபதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், அகிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Sep 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?