Begin typing your search above and press return to search.
சிதம்பரம் அருகே ரூ. 19 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி எஸ்.பி. உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.அப்போது ரூ.19 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் புதுச்சத்திரம் காவல்துறையினர் புகையிலை பொருள் வைத்திருந்த இருவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.