சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர உச்சியில் ஏற்றப்பட்டது தேசிய கொடி

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர உச்சியில் ஏற்றப்பட்டது தேசிய கொடி
X

குடியரசு தினவிழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர உச்சியில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

1947 ஆண்டு முதல் இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள நடராஜப் பெருமானிடம் வெள்ளித்தட்டில் இந்திய தேசியக் கொடியை வைத்து பூஜித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலின் நான்கு பிரகாரங்களும் சுற்றிவந்து கிழக்கு கோபுரமான 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றினர்.

எழுபத்தி மூன்று ஆண்டுகளாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஆசியாவிலேயே சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தான் 152 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் நடராஜப்பெருமானுக்கு ஆறு மணி அளவில் தீபாரதனை நடந்து முடிந்தவுடன் பொது தீட்சிதர்கள் வெள்ளித் தட்டில் இந்திய தேசியக் கொடியை வைத்து மேளதாளத்துடன் நடராஜ பெருமானின் திருவடியில் வைத்து பூஜித்து இன்று 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

கொடி ஏற்றிய உடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இது சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் நடைபெற்றது.

Updated On: 26 Jan 2022 11:56 AM GMT

Related News

Latest News

 1. வேளச்சேரி
  கத்திமுனையில் பெண் பாலியல் வன்புணர்வு : பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்...
 2. ஈரோடு
  மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி அந்தியூரில் ஆலோசனை கூட்டம்
 3. கீழ்பெண்ணாத்தூர்‎
  திருவண்ணாமலை: வீட்டின் பூட்டை திறந்து 15 பவுன்நகை, ரூ.5 லட்சம்...
 4. ஈரோடு
  அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.86 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
 5. திருவொற்றியூர்
  பேரறிவாளன் விவகாரத்தில் எதிர்ப்பை காட்டுவோம்- விஜய்வசந்த் எம்.பி.
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் நடந்து வரும் சாலை பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு
 7. ஈரோடு
  அந்தியூரில் நாளை தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
 8. போளூர்
  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மாநில ஆணையர் ஆய்வு
 9. ஈரோடு
  சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (22ம் தேதி) நிலவரம்
 10. மயிலாடுதுறை
  பட்டணப் பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்