/* */

கார்ப்பரேட்டுகளை வீதிக்கு வர வைத்த சாலையோர வியாபாரிகள்

சாலையோர வியாபாரிகள் கொடுக்கும் வியாபார நெருக்கடிகளை சமாளிக்க முடியால் கார்ப்பரேட்டுகள் ரோட்டுக்கு வந்து விட்டனர் என்பது சற்று சுவாரஸ்யமாக உள்ளது

HIGHLIGHTS

கார்ப்பரேட்டுகளை வீதிக்கு வர வைத்த சாலையோர வியாபாரிகள்
X

சாலையோர கடைகள். இடம்: தேனி பெரியகுளம் ரோடு.


தமிழகத்தில் கார்ப்பரேட்டுகள் வணிகங்களை கைப்பற்றி விட்டனர் என்பது முழு உண்மை தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கார்ப்பரேட்டுகளை சமாளிக்க முடியாமல் பல சிறு, குறு தொழில் அதிபர்கள் வீழ்ந்தனர். சிறு தொழில்கள் பலத்த அடி வாங்கின. இதெல்லாம் கொரோனாவிற்கு முன்பு வரை மட்டுமே.

கொரோனாவிற்கு பின்பு காலமும், சூழலும் மாறியது. சிறு தொழில் அதிபர்கள் அணி அணியாக களம் இறங்கி வருகின்றனர். குறிப்பாக நடுத்தர சமூகம் எடுத்துள்ள வணிக முடிவுகளால் நடுத்தர சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது.

தமிழகத்தில் கிராமங்களை தவிர்த்து, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என எங்குமே சிறு தொழில் தொடங்க வேண்டுமென்றால், இன்று பல லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது. இந்த முதலீடு தொழிலுக்கு இல்லை. தொழில் செய்யும் இடத்திற்கு அட்வான்ஸ், உள் கட்டமைப்பு வசதி, அலங்காரம் என பல லட்சங்கள் செலவாகி விடும். அடுத்து மாதந்தோறும், பல ஆயிரம் வாடகை, மின்கட்டணம், பணியாளர்கள் சம்பளம் என வாட்டி எடுத்து விடும். அந்த அளவு வியாபாரம் இருக்காது என்பது தான் உண்மையானா கள நிலவரம் .

இங்கு தான் களம் மாறி உள்ளது. தமிழகத்தில் நான்கு வழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநிலச்சாலைகள், கிராமச்சாலைகள் என பல லட்சம் கிலோ மீட்டர்களுக்கு மேல் இருக்கும். அதில் ஆயிரக்கணக்கான சந்திப்புகள் உள்ளன. இந்த சாலையோரங்கள் தான் தற்போதைய மார்க்கெட்டுகளாக மாறி விட்டன.

இன்றைய நிலையில் நகர் பகுதிக்குள் உள்ள வணிகங்களின் பெரும் பகுதியினை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றி விட்டனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச்சாலைகள், மாநிலச்சாலைகள் அனைத்தும் நகர்பகுதியின் நெரிசலை குறைக்க அத்தனை பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளை புறவழிச்சாலை மூலம் கடந்து செல்கின்றன. நகருக்குள் நெரிசலை குறைக்க பைபாஸ் அவசியம் என காவல்துறையினர் கொடுக்கும் நெருக்கடிகளே புறவழிச்சாலைகள் அதிகரிக்க அடிப்படை காரணம்.

உள்ளூரில் நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இன்று தமிழகத்தில் மேம்பாலங்கள் இல்லாத பெரிய நகரங்களே இல்லை என எளிதாக கூறி விடலாம். அந்த அளவுக்கு வளர்ச்சிப்பணிகள் அசுரத்தனமாக நடக்கின்றன. மேம்பாலங்கள் கட்டப்பட்ட இடங்களின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக வீழ்ந்து விடுகின்றன.

இந்த சூழலை தான் சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கும் காவல்துறையினரே காரணம். போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி நூற்றுக்கணக்கான சாலையோர வியாபாரிகளை காவல்துறை விரட்டி அடித்தது. இப்படி துரத்தப்பட்ட வியாபாரிகள் வீதிக்கு வந்து விட்டனர். நடுத்தெருவிற்கு வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், நெடுஞ்சாலையோரங்களை கைப்பற்றி விட்டனர். வாடகை இல்லை. அலங்கார செலவு இல்லை. மின்கட்டண செலவு இல்லை. சம்பள ஆள் செலவு இல்லை. போக்குவரத்து தொல்லை இல்லை. சுத்தமான, சுகாதாரமான சூழல், சாலையோரம். தவிர உள்ளூரை விட அதிகளவி்ல் சாலைகளில் நடைபெறும் பயணங்கள், மக்கள் போக்குவரத்து இவர்களுக்கு பெரும் ஆதரவாக உள்ளது.

முன்பெல்லாம் சாலையோரங்களில் பல கி.மீ., துார இடைவெளியில் பெட்ரோல் பங்குகள் மட்டும் இருக்கும். அடுத்து, சிறு, சிறு டீக்கடைகள் வந்தன. அடுத்து நடுத்தர வர்க்கத்தினரின் ஓட்டல்கள் வந்தன. இது மெல்ல, மெல்ல வளர்ந்து இப்போது காய்கறி மற்றும் கருப்பட்டி முதல் இருந்து ஜவுளி வரை ரோட்டோரங்களில் கிடைக்காத பொருட்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. எந்த பொருளை மக்கள் எந்த நேரத்தில் விரும்புவார்கள் என மிக நுட்பமாக தேர்வு செய்து அந்த பொருளை விற்று சம்பாதித்து விடுகின்றனர்.

இன்று பொது போக்குவரத்தை விட தனிப்போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து விட்டது. நெடுஞ்சாலையில் வாகனங்களி்ல் செல்பவர்களும், ஊருக்குள் போய் வாகனத்தை நிறுத்த இடம் இல்லாமல் ஏன் தவிக்க வேண்டும் என நினைத்து ரோட்டோர வணிகங்களில் தங்களது தேவைகளை முடித்து விடுகின்றனர். அதுவும் உணவுத்துறை நெடுஞ்சாலையில் பெரும் ஆளுமை செய்து வருகிறது.

ஊருக்குள் இருந்து எங்களை விரட்டினீர்கள். நாங்கள் ரோட்டில் நின்று மக்களை கைப்பற்றி, ஊருக்குள் விடாமல் தடுத்து உங்களை வீழ்த்துகிறோம் என சாலையோர வியாபாரிகள் பெரும் வணிகர்களையும் கார்ப்பரேட்டுகளையும் வீழ்த்தி விட்டனர். இதனால் வேறு வழியின்றி கார்ப்பரேட்டுகள் பல கோடிகளை இறைத்து ரோட்டோரங்களில் உள்ள நிலங்களை வாங்கி தங்களது வணிக நிறுவனங்களை நிறுவி வருகின்றனர்.

பல நவீன ஓட்டல்களும், நவீன டீக்கடைகள், பேக்கரிகள் ரோட்டோரங்களில் வந்து விட்டன. இதனால் தொழில் போட்டி கடுமையாகி உள்ளது. இந்த உணவுத்துறை போட்டியில் நடுத்தர வர்க்தத்தினரின் கைப்பக்குவத்திற்கு எந்த கார்ப்பரேட் ஓட்டல்களாலும் ஈடு கொடுக்க முடியவில்லை. வேகமாக பல கார்ப்பரேட்டுகள் ரோட்டோரங்களை நாடி வருகின்றனர். எப்படியோ கார்ப்பரேட்டுகளையும் ரோட்டுக்கு கொண்டு வந்துட்டோம் என சாலையோர வியாபாரிகள் சொல்லி சிரிக்கின்றனர்.

Updated On: 5 Feb 2023 6:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  4. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  5. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  8. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  9. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  10. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!