Begin typing your search above and press return to search.
கொரோனா விதி மீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படும்: டிஜிபி சைலேந்திரபாபு
இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு
HIGHLIGHTS

டிஜிபி., சைலேந்திர பாபு.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் எனவும், இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களை தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் வழக்குகளை திரும்பப்பெற சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.