/* */

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: மருத்துவமனைகளுக்கு கடும் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகள் விவரம் தராத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: மருத்துவமனைகளுக்கு கடும் எச்சரிக்கை
X
சென்னை மாநகராட்சி பழமையான ரிப்பன் கட்டிடம்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து, மனித உயிர்களை காவு வாங்கிய கொரோனா வேகம் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் புதிதாக 596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேர், செங்கல்பட்டில் 122 பேர், கோவையில் 31 பேர் உள்பட 26 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி இருந்தது. தமிழக தலைநகர் சென்னையிலும் கொரேனா தொற்று அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகள் கொரோனா தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினால் தகவல் அளிக்க வேண்டும் என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On: 19 Jun 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?