கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை

கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
X

பிரியதர்ஷினி.

கோவை தொண்டாமுத்தூர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் பிரியதர்ஷினி (22), பி.காம் பட்டதாரியான இவர், தொண்டாமுத்தூர் பகுதியில் தனியார் தட்டச்சு பயிற்சி மையம் மற்றும் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திலும் படித்து வந்தார்.

நேற்று வழக்கம் போல ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்திற்கு சென்று மாலை வீட்டிற்கு வந்த பிரியதர்ஷினி வீட்டிற்குள் சென்று தாழிட்டு கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.சம்பவம் தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 May 2022 2:28 AM GMT

Related News