/* */

கோவையில் இன்று 201 பேருக்கு கொரோனா பெருந்தொற்று: 5 பேர் பலி

கோவையில் இன்று 201 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவையில் இன்று 201 பேருக்கு கொரோனா பெருந்தொற்று: 5 பேர் பலி
X

கோவையில் கடந்த ஒரு மாத காலமாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 201 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 177 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 191 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 678 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2302 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 14 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!