/* */

டாப்சிலிப் மலைவாழ் மக்கள் உறைவிடப் பள்ளியில் முதன்முதலாக நூலகம்

டாப்சிலிப் மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் இயற்கையை நேசி அறக்கட்டளை சார்பில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

டாப்சிலிப் மலைவாழ் மக்கள் உறைவிடப் பள்ளியில் முதன்முதலாக நூலகம்
X

டாப் ஸ்லிப் பள்ளி நூலகம் 

டாப்சிலிப்பில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் இயற்கையை நேசி என்ற அறக்கட்டளையின் சார்பில் தமிழகத்திலேயே முதல் முறையாக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக வனத்துறையின் கட்டுப்பாட்டில் ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச் சரகத்தில் ஒரு உண்டு உறைவிடப் பள்ளியும், சேலத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் மலைவாழ் மக்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளியும் என ஒரு சில இடங்களில் மட்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் மலைவாழ் மக்களுக்கான அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

டாப்சிலிப்பில் வனத்துறை கட்டுப்பாட்டில் மலைவாழ் மக்கள் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் எருமைப்பாறை, வரகலியாறு, கோழிகமுத்தி பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் சுமார் 80 பேர் வரை படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு வனத் துறையினர் சார்பில் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மலைவாழ் மக்களின் குழந்தைகள் அறிவை மேம்படுத்த இயற்கையை நேசி என்ற அறக் கட்டளையின் சார்பில் பள்ளியில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மலைவாழ் மக்கள் குழந்தைகளுக்காக செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் நூலகம் அமைவது டாப்சிலிப்பில் உள்ள இந்தப் பள்ளியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலகத்தில் இயற்கை, வன விலங்குகள், கதைகள், புராண கதைகள், அறிவியல், வரலாற்றுத் தகவல்கள், நீர்நிலைகள், விஞ்ஞானம் விடுகதைகள், படத்துடன் கூடிய கதைகள் போன்ற 350 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாதுகாக்கும் வகையில் ஸ்டீல் பீரோ, இரண்டு ஸ்டீல் ரேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

புத்தகங்களை அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் வெற்றிவேல், அறங்காவலர்கள் கவிதா, முருகானந்தம், ஆனந்தகுமார் ஆகியோர் உலாந்தி வனச் சரகர் சுந்தரவேல், பள்ளியின் ஆசிரியை வனஜா ஆகியோரிடம் வழங்கினர்.

Updated On: 18 Dec 2022 6:31 AM GMT

Related News