/* */

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சமையல் மாஸ்டர்

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலில் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சமையல் மாஸ்டரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சமையல் மாஸ்டர்
X

மாதிரி படம் 

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவை சூலூரை சேர்ந்த சமையல் மாஸ்டர் முருகேசன் (வயது 35) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போன் மூலமாக பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்து 9 மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போனதால், திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து முருகேசன் சூலூரில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணுடன் தங்கினார். அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அவர் 5 மாஅந்த பெண் கர்ப்பமானார். இதனையடுத்து அவர் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த நிலையில் முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியான இளம்பெண் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய முருகேசன் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியதுடன், அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பினார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சூலூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான முருகேசனை தேடி வருகிறார்கள்.

Updated On: 20 May 2023 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  6. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  8. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  9. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  10. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு