/* */

மேட்டுப்பாளையம்-நெல்லை ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

Mettupalayam To Tirunelveli Train -மேட்டுப்பாளையத்தில் இருந்து, (உடுமலை வழி) நெல்லை சிறப்பு ரயிலை, மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

மேட்டுப்பாளையம்-நெல்லை ரயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தல்
X

மேட்டுப்பாளையம் - நெல்லை ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

Mettupalayam To Tirunelveli Train -மேட்டுப்பாளையம் - நெல்லைக்கு இடையே கோடை சிறப்பு ரயில், கடந்த ஏப்ரல் 21-ம் தேதிமுதல் ஜூலை 1-ம்தேதி வரை வாரத்தில் ஒருநாள் இயக்கப்பட்டது. ஒவ்வொரு வியாழன் அன்றும், இரவு 7மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக அடுத்த நாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.48 மணிக்கு உடுமலைக்கு வந்து, அங்கிருந்து 3.50-க்கு புறப்பட்டு கோவை வழியாக காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வந்து சேர்ந்தது. மறுமார்க்கத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45மணிக்கு புறப்பட்டு கோவை, பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10.33-க்கு வந்து, அங்கிருந்து10.35-க்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி வழியாக அடுத்தநாள் (சனிக்கிழமை) காலை 7.45மணிக்கு நெல்லைக்கு சென்று சேர்ந்தது.

இந்த சிறப்பு ரயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பும், தென்மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் கூட்டமும் இருப்பதால், இந்த ரயில் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சிறப்பு ரயில் கடந்த ஜூலை 21-ம் தேதி முதல், இந்தமாதம் 19-ம் தேதி வரை, வாரத்தில் ஒருநாள் இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்த ரயில் சேவைக்கான அறிவிப்பை பயணிகள் எதிர்பார்த்த நிலையில், இதுவரை அறிவிப்பு வரவில்லை. இந்த ரயிலை மீண்டும் தினமும் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 April 2024 10:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்