/* */

தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் படுகாயமடைந்த பாகன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

HIGHLIGHTS

தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு
X

முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், முதுமலை தெப்பக்காடு பகுதியில் யானைகள் வளா்ப்பு முகாம் உள்ளது. இங்கு 28 வளா்ப்பு யானைகள் வனத் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில், முகாமில் வளர்ப்பு யானை மசினிக்கு பாகன் பாலன் காலை உணவு கொடுப்பதற்காக அருகில் சென்றதாகத் தெரிகிறது. அப்போது யானை தாக்கியதில் பாகன் பிரசாந்த் பாலன்(55) படுகாயம் அடைந்தார்

இதையடுத்து பாகன் பாலனை சக பாகன்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்தது வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கனவே, 2019 இல் சமயபுரம் கோயிலில் இருந்த மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மசினி யானை ஏற்கனவே 2019ல் சமயபுரம் கோவியிலில் இருந்தபோது பாகனை தாக்கி கொன்றதால் தான் மசினி யானை முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.

முன்னதாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் விழாவின் போது மசினி யானைக்கு எதிர்பாராத விதமாக மதம் பிடித்துள்ளது. இதையடுத்து, கோயில் வளாகத்தைச் சுற்றி சுற்றி ஓடியது. அப்போது, யானையை சமாதானப்படுத்தும் முயற்சியில், யானை பாகன் கஜேந்திரன் (50) என்பவர் ஈடுபட்டார். ஆனால், கோபத்தில் இருந்த யானை பாகனை தனது தும்பிக்கையால் தூக்கிப்போட்டு மிதித்தது. இதில், சம்பவ இடத்திலேயே பாகன் கஜேந்திரன் உயிரிழந்தார். மேலும், குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளது.

Updated On: 28 April 2023 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...