/* */

இரிடியம் இருப்பதாக நூதன மோசடி செய்த ஆறு பேர் கைது

பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல் கேரளாவை சேர்ந்தவர்களிடம் ஏமாற்றுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

HIGHLIGHTS

இரிடியம் இருப்பதாக நூதன மோசடி செய்த ஆறு பேர் கைது
X

கைது செய்யப்பட்டவர்கள்.

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி, ஒரு கும்பல் கேரளாவை சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டி வருவதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த 8 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்கு கூடியிருந்தது தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் ராணிப்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போஜராஜ், கோவையை சேர்ந்த முருகேசன், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு என்பதும் இவர்கள் கேரளாவை சேர்ந்த ரைஸ் புல்லிங் மோசடி கும்பலை சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தற்போது கேரளாவை சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அனுகி தங்களிடம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம் ரைஸ் புல்லிங் இருப்பாதக கூறிய இந்த கும்பல் பல தவணைகளாக ரூ.27 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்த கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்து வந்துள்ளனர்.

சாதாரண வெங்கல செம்பை பெட்டிக்குள் வைத்து, பெட்டிக்குள் மிளகாய் பிரேவை அடித்து வைத்துக் கொள்கின்றனர். பின்னர் வாங்க வருவோரிடம் கவச உடைகளை அணிந்து கொண்டு வெளியே எடுக்கும் போது அந்த இரிடியத்திற்கு சக்தி உள்ளது போல காட்டி ஏமாற்றியதும் கண்டிபிடிக்கப்பட்டது. இந்த கும்பலை 6 பேரையும் பிடித்த போலிசார் அவர்களிடமிருந்து 99.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கேரளாவை சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து போலிசார் தேடி வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்