3 மாத குழந்தையை கொலை செய்த பாட்டி: போலீஸ் விசாரணை

மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டி குழந்தைகளை கொடூரமாக தாக்கியதில் 3 மாத குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
3 மாத குழந்தையை கொலை செய்த பாட்டி: போலீஸ் விசாரணை
X

சாந்தி.

கோவை கவுண்டம்பாளையம் நாகப்பா காலணி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஆரியன், ஆரியா என்ற 3 மாத இரட்டை குழந்தைகளும் இருந்தனர். இவர்களது வீட்டில் ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்தார். சாந்திக்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா மருந்துக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு குழந்தைகளை சாந்தியிடம் விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது சாந்தி இரண்டு குழந்தைகளையும் கொடூரமாக தாக்கியுள்ளார். வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா காயமடைந்த இரண்டு குழந்தைகளையும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆர்யன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆர்யாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய சாந்தியை தேடி வருகின்றனர்.

Updated On: 22 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

 1. திருவில்லிபுத்தூர்
  திருவில்லிபுத்தூரில் பலத்த மழை: ஊருக்குள் மழைநீர் புகுந்ததால் கிராம...
 2. அவினாசி
  எல்.ஐ.சி., முகவர்களுக்கு பென்ஷன் திட்டம் சங்கம் எதிர்பார்ப்பு
 3. சிவகாசி
  சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
 4. தாராபுரம்
  ஊராட்சி தலைவர் கார் மீது லாரி மோதி விபத்து
 5. கும்பகோணம்
  சுவாமிமலை அருகே உரக்கடை அடித்து உடைத்து சேதம் :மர்ம நபர்கள் கைவரிசை
 6. உடுமலைப்பேட்டை
  நிரம்பியது அணை: திறந்துவிடப்பட்ட தண்ணீர்
 7. கும்பகோணம்
  தஞ்சையில் விற்பனைக்கு வந்த 100 விதமான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள்
 8. காஞ்சிபுரம்
  ரூ 8 லட்சம் மதிப்பிலான இரு மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த...
 9. தாராபுரம்
  போலி விதை கண்டறிய உஷார்படுத்தும் அதிகாரிகள்
 10. திருவாரூர்
  சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்