/* */

கோவையில் 300 படுக்கையுடன் கோவிட் கேர் மையம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

கோவையில் 300 படுக்கையுடன் கூடிய கோவிட் கேர் மையத்தை, அமைச்சர்கள் சக்ரபாணி, ராமச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இச்சூழலில், நோயாளிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா நிறுவனத்தின் ஜூவல் ஒன் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா வளாகத்தில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து, எமரால்டுஜூவல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், இம்மையத்தில் 290 படுக்கைகளும் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சத்துள்ள உணவு, அவர்களது மனநலம் பேணுதல், அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுதல் ஆகிய அம்சங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்த உள்ளது.

மேலும் இங்கு படுக்கை வசதி, பேன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மையத்தில் கூடுதலாக நவீன வைபை, புரொஜக்டர் வசதிகள், செல்போன் சார்ஜிங் பாயிண்ட்ஸ், விளையாட்டுகள் முதலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது என்றார்.

Updated On: 28 May 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்