/* */

ஸ்மார்ட் சிட்டி பணிக்காக மரங்கள் அகற்றம் - கருப்பு சட்டை அணிந்து ஆர்வலர்கள் எதிர்ப்பு

கோவையில், ஸ்மார்ட் சிட்டி பணிக்காக மரங்கள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புச்சட்டை அணிந்து சமூக ஆர்வலர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

கோவையில் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவையிலுள்ள குளங்கள் புணரமைப்பது, சாலைகளை அழகுபடுத்துவது, போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பந்தய சாலை பகுதியில் சுமார் 3.5கிலோ மீட்டர் கொண்ட இந்த பந்தைய சாலை மாநகரில் மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்து வருகிறது.

இங்கு, சிறுவர் முதல் வயதான முதியவர்கள் வரை நடைபயிற்சி, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இயற்கையான சுழல், சுத்தமான ஆக்சிஜன் காற்று கிடைக்கும் இடமாக பார்க்கபட்ட இந்த பந்தைய சாலையில் தற்போது கோவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி செலவில் தொடங்கபட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஸ்மார்ட்சிட்டி பணிக்காக மரங்களை அகற்றியதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், மரங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், நடைபயணம் மேற்கொள்வோர், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து நடைபயிற்சி மேற்கொண்டனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக இந்த பந்தைய சாலையை அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில் இயற்கை மரங்கள் பூத்து குலுங்கும் மரங்களை அகற்றி விட்டு ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் காங்கிரீட் தளம் அமைக்கபட்டும் அலங்கார விளக்குகள் பொறுத்தபட்டுள்ளது.

இதனால் யாருக்கு எந்த பலனும் இல்லை எனவும் தற்போது கொரனா போன்ற பேரிடர் காலத்தில் சரியான ஆக்சிஜன் கிடைக்காமல் தட்டுப்பாடு உள்ள நிலையில் இயற்கையான ஆக்சிஜன் கொடுக்கும் மரங்களை அகற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

மேலும், இதுதொடர்பாக இணைய வழியில் அளிக்கபட்ட மனுவில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் மரங்களை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பந்தைய சாலையில் ஸ்மார்ட்சிட்டி அமைக்க எந்த மாதிரி பணிகள் செயல்படுத்தப்படவுள்ளது என்ற திட்ட அறிக்கை வெளியிடாமலும் அப்பகுதி மக்களை கருத்தி கேட்காமலும், மக்கள் கேட்காத இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பேசிய மரம் அமைப்பின் அறங்காவலர் ஜவஹர், ஸ்மார்ட் சிட்டி பணிக்காக பழமையான தாமஸ் பூங்கா அகற்ற பட்டுள்ளதாகவும், ஸ்மார்ட் பணியின் திட்ட அறிக்கையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுப்பதாகவும் மக்களின் கருத்த கேட்காமல் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும், பசுமை இருந்தால் தான் பறவைகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே மரங்களை அகற்றிவிட்டு காங்கீரீட் அமைப்பதால் மட்டுமே பசுமையை காக்க முடியாது என்றார்.

காங்கரீட் அமைப்பதை விடுத்து மரங்களை வளர்க்க இயற்கை, மற்றும் சமூக ஆர்வலர்கள் தயாராக இருப்பதாகவும் மாநகராட்சி அதற்கான இடத்தை வழங்க முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Updated On: 21 April 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  3. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  4. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  5. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  7. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  8. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  9. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  10. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?