/* */

கோவையில் பிரபல உணவக ஊழியரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருட்டு

Crime News Tamil- கோவையில் பிரபல உணவக ஊழியரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருட்டு போனது பற்றிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

கோவையில் பிரபல உணவக ஊழியரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருட்டு
X

கோவையில் இருசக்கர வாகனத்தை ஒருவர் திருடி சென்ற காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

Crime News Tamil- கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் ஆனந்தாஸ் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதில் பாப்பநாயக்கன்பாளையத்தைச்சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இதனிடையே சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தை உணவகத்தின் பின்புறம் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு வேலை செய்துகொண்டிருந்தார்.பணி முடிந்து திரும்பி சென்ற பன்னீர் செல்வம், நிறுத்தப்பட்ட இடத்தில் தனது இருசக்கர வாகனம் மாயமானதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து உணவகத்தில் இருந்த சி.சி.வி.டி. காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர் மர்ம நபர் சாவகாசமாக வந்து இருசக்கர வாகனத்தை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் பன்னீர் செல்வம் பந்தயச்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபரை தேடி வருகின்றனர்.

இதேபோன்று நீலிகோணம்பாளையத்தைச்சேர்ந்த சண்முகம் என்ற முதியவர் கோவை அரசு மருத்துவமனை அருகிலுள்ள அம்மா உணவகம் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மருந்து வாங்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்த்தால் அதிர்ச்சியடைந்த முதியவர் இது தொடர்பாக பந்தயச்சாலை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக கோவை மாநகரில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 July 2022 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  4. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  5. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  6. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  7. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  9. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  10. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை