/* */

கோவையில் இருந்து விமானத்தில் ஷார்ஜாவுக்கு சென்ற கரும்பு

ஷார்ஜா மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட கோவையில் இருந்து விமானத்தில் கரும்பு அனுப்பப்பட்டது.

HIGHLIGHTS

கோவையில் இருந்து விமானத்தில் ஷார்ஜாவுக்கு சென்ற கரும்பு
X

பைல் படம்.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஷார்ஜா மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட கோவையில் இருந்து விமானத்தில் கரும்பு அனுப்பப்பட்டது. இதுதவிர மஞ்சள், வெல்லமும் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஷார்ஜா விமானத்தில் கரும்பு கொண்டு செல்ல புக்கிங் செய்யப்பட்டது.

கடந்த 8-ந் தேதி முதல், கரும்பு அனுப்பும் பணி தொடங்கியது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. மொத்த கரும்புகளையும் கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படும். இதனால், மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் 400 கிலோ குறைத்து 600 கிலோ கரும்பு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஐந்து நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஐந்து டன் கரும்பு மற்றும் இரண்டு டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டன என தெரிவித்தனர்.

Updated On: 16 Jan 2023 3:15 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி