/* */

பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக்குங்கள்: வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan Caste-தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக்க வேண்டும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக்குங்கள்: வானதி சீனிவாசன்
X

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் 

Vanathi Srinivasan Caste-தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக்க வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுத்து சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகியுள்ளார். உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான். முதல்வர் ஸ்டாலினின் மகன் என்பதால்தான் குறுகிய காலத்தில் இந்த உயரத்தை உதயநிதி ஸ்டாலினால் எட்ட முடிந்துள்ளது. இதுதான் வாரிசு அரசியல்.

அமைச்சரவையில் 35 பேர் உள்ள நிலையில் இப்போதாவது பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் .ஸ்டாலின் துணை முதல்வராக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவம் என்பதை பேச்சில் மட்டுமல்லாது, செயலிலும் முதல்வர் ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்.

கட்சித் தலைவராக யார் இருந்தாலும், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் காங்கிரஸை வழிநடத்துகின்றனர். மற்றவர்கள் கட்சிக்காக எவ்வளவு உழைத்திருந்தாலும், எவ்வளவு திறமை மிக்கவர்களாக இருந்தாலும், காங்கிரஸை வழிநடத்தும் தலைமைப் பொறுப்புக்கு வரவே முடியாது. இதுபோன்ற நிலைதான் திமுகவிலும் உள்ளது.

முடிவுகளை எடுக்கும், கட்சியை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பு ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்காது. இது பெரும் சமூக அநீதி. இதனை பாஜக எதிர்க்கிறது.

பாஜகவில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வருவது கிடையாது. தேசியத் தலைமை மட்டுமல்லாமல், எந்தவொரு மாநில தலைமையிலும் வாரிசுகள் இல்லை. எனவே, தங்கள் மீதான வாரிசு அரசியல் விமர்சனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் பாஜகவில் வாரிசு அரசியல் இருப்பதாக அவதூறு பரப்புவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 March 2024 5:45 AM GMT

Related News