/* */

சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து

பராமரிப்பு பணிகளுக்காக பிப்ரவரி மாதம் முழுவதும் சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ஒரு மாதத்திற்கு ரத்து
X

சேலம் கோவை மெமு பயணிகள் ரயில்

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் பாதை பராமரிப்புக் காரணமாக, சேலம் - கோவை இடையிலான பயணிகள் (மெமு) ரயில் சேவை ஏற்கெனவே இரு மாதங்களாக இயக்கப்படாத நிலையில், நாளை (1-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதி வரை மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் ஜங்ஷன்- கோவை சந்திப்பு இடையே இரு மார்க்கத்திலும் பயணிகள் (மெமு) ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சேலம் - கோவை இடையிலான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் என இரு மாதங்களும், சேலம் - கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், திருப்பூர் - கோவை இடையிலான வழித்தடத்தில், இருகூர் மற்றும் சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சேலம் - கோவை பயணிகள் (மெமு) ரயில் (எண்.06803) மற்றும் கோவை - சேலம் பயணிகள் (மெமு) ரயில் (எண்.06802) ஆகியவற்றின் சேவை, நாளை (1-ம் தேதி) தொடங்கி, பிப்ரவரி 28-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 1 Feb 2023 3:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!