/* */

ரேஸ்கோர்சில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி.

ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்சில் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெறுகிறது

HIGHLIGHTS

ரேஸ்கோர்சில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி.
X

கோவை மாநகரின் மத்திய பகுதியில் ரேஸ்கோர்சில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த நடைபாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கம். இதனால் நடைபயிற்சி செய்பவர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். இதன் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பாதையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் நவீனமழைநீர் கட்டமைப்பு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டி அதன் மேல் துவாரம் உள்ள பிளாஸ்டிக் கூண்டு வைக்கப்பட்டது. அதன் மீது ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, மண் கொண்டு மூடப்பட் டது.

இந்த மழைநீர் கட்டமைப்பில் சேரும் மழைநீர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து நிர்மலா கல்லூரி செல்லும் சாலையோர பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு மழைநீரை சேமிக்க 8.5 மீட்டர் அகலம், 7.5 மீட்டர் நீளம் உள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தொட்டியில் 6 அடி உயரத்திற்கு துளைகள் உள்ள பிளாஸ்டிக் கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் இந்த தொட்டி ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டு பூங்கா அமைக்கப்படும்.

இது குறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரி ஒருவர் கூறுகையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் சேகரமாகும் மழைநீர் குழாய் மூலம் தொட்டிக்கு கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம் நடைபயிற்சி பாதையில் மழை காலங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படுவது மட்டுமல்லாது அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று கூறினார்

Updated On: 1 Jan 2023 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...