/* */

கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாலைத்தொழிலாளர்கள்

மத்திய அமைச்சர்கள் தமிழகம் மற்றும் கோவைக்கு வரும்போது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடுவோம்

HIGHLIGHTS

கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாலைத்தொழிலாளர்கள்
X

கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாலை தொழிலாளர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்டிசி பாஞ்சாலைகளின் தொழிலாளர்கள் கோவையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய பஞ்சாலை கழகத்தின் என்டிசி ஆலைகளின் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவை புரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள என்டிசி பஞ்சாலையின் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதில் மூன்று ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், முழு சம்பளம் கொடுத்து பென்ஷன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும், மூன்று ஆண்டு போனஸ் இதர பயன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து பேசிய இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், தமிழக அரசு நிதியிலிருந்து என்டிசி தொழிலாளர்களுக்கு கருணை அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டும். தங்களது போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், மத்திய அமைச்சர்கள் தமிழகம் மற்றும் கோவைக்கு வரும்போது தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

Updated On: 20 April 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு