/* */

கோவை திருச்சி சாலை மேம்பாலத்தின் சுவரில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Trichy Road Flyover-கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுவரில் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கோவை திருச்சி சாலை மேம்பாலத்தின் சுவரில் மோதி ஒருவர் உயிரிழப்பு
X

விபத்து நடந்த பாலத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Trichy Road Flyover-கோவை ஒப்பணக்கார வீதி பகுதியைச் சேர்ந்த 51 வயது நிரம்பிய ஆனந்தகுமார், ஒண்டிபுதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று வழக்கம்போல பணிக்கு ஒன்டிபுதூர் நோக்கி அவர் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது சுங்கம் பகுதியை அடைந்தபோது வளைவில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி 40 அடி உயரத்திலிருந்து வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் நிகழ்வு இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதேபோல் பாலத்தின் மீதிருந்து கடந்த மாதம் முன்பு கீழே விழுந்த ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட அடுத்தநாளே இளைஞர் ஒருவர் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பாலம் திறக்கப்பட்ட 2 மாதத்திற்குள் 3 உயிரிழப்புகள் நிகழ்ந்து விட்ட நிலையில் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர்களை சற்று உயரமாக அமைக்க வேண்டும் அல்லது கோவை 100 அடி சாலையை இணைக்கும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது போல் கம்பி வேலி தடுப்புகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 March 2024 6:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை