/* */

கோவையில் புதிதாக 1426 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு

நேற்றைய தினத்தை விட இன்று 271 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவையில் புதிதாக 1426 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவையில் இன்று 1426 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.நேற்றைய தினத்தை விட இன்று 271 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 19 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 19931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 3126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 214 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2578 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 3 Feb 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி