/* */

யானை ரயிலில் அடிபட்டு இறந்தது பற்றி கேரள வனத்துறை நேரடி விசாரணை

கஞ்சிக்கோடு- வாளையாறு இடையே யானை ரயிலில் அடிபட்டு இறந்தது பற்றி கேரள வனத்துறை அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

யானை ரயிலில் அடிபட்டு இறந்தது பற்றி கேரள வனத்துறை நேரடி விசாரணை
X

யானை பைல் படம்.

கேரளா மாநிலம் கஞ்சிக்கோடு- வாளையாறு இடையே 512 வது கிலோ மீட்டரில் ரயில் அடிபட்டு பெண் யானை உயிரிழந்தது தொடர்பாக கேரள வனத்துறையினர் சம்பவ இடத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.

பாலக்காடு - வாளையாறு - மதுக்கரை இடையே உள்ள ரயில்வே பாதைகளை கடக்கும் காட்டு யானைகள் மீது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நடந்து வருகிறது.இதில் தமிழக எல்லைகளில் நிகழும் ரயில் - யானை மோதல் சம்பவங்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் வேகக்கட்டுப்பாடு சோலார் விளக்கு, ஒலி எழுப்பி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரளா எல்லை வாளையாறு அருகே விரைவு ரயில் மோதி மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.

கேரளா வனத்துறையினர் இந்த சம்பவம் பற்றி நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கோவையில் தொடர்ந்து ரயில்பாதையில் யானைகளின் உயிரிழப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்பது இங்குள்ள மக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ் பழமொழி. யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது யானை பற்றிய இன்னொரு முதுமொழி ஆகும். என்னதான் காட்டுக்கு ராஜாவாக சிங்கம் இருந்தாலும் யானை தான் உருவத்தில் பெரியது. யானை காட்டு விலங்காக இருந்தாலும் அது ஒரு சைவ ஆகும்.யானை அசைவம் சாப்பிடாது. இலை, தழை, பழங்கள் மற்றும் மனிதர்கள் சாப்பிடக்கூடிய சோறு உள்ளிட்ட உணவுகளை தான் சாப்பிடுமே தவிர அது ஒருபோதும் அசைவம் சாப்பிடாது.

யானைகளை கண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆச்சரியம் அடைவது உண்டு. ஏனென்றால் அதன் உருவ அமைப்பு அப்படி. யானையின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்று இருக்கிறது. யானை தந்தம் சிறப்பு வாய்ந்த ஒரு உறுப்பு ஆகும். யானை தந்தம் அரங்குகளில் காட்சி பொருளாக வைக்கப்படுகிறது அது விலைமதிப்பற்றது ஆகும். அதனால்தான் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் என்கிறார்கள்.

இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வருகிறது. அடர்ந்த காடுகளில் வசிக்கும் யானைகளை சமூக விரோதிகள் வேட்டையாடி அவற்றின் உறுப்புகளை கடத்தி விற்று விடுகிறார்கள். அந்த வகையில் யானைகளை பாதுகாக்க வேண்டும் காட்டுப்பகுதிகளில் அவை வசிக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். யானை பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்குகளில் அவ்வப்போது தீர்ப்புகள் கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில் யானை பாதைகள் நிறைய இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் நம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தட்பவெப்ப சூழ்நிலை, குடிநீர் தேவை போன்ற காரணங்களுக்காக யானைகள் தன் வசிப்பிடத்தை விட்டு அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விடுவது உண்டு. அப்படி வெளியேறும் யானைகள் மீண்டும் தங்கள் வசிப்பிடத்தை அடைவதற்கு சிரமப்படுகின்றன. அதற்கு காரணம் யானை பாதைகள் ஆக்கிரமிப்பு தான். எனவே இந்த விஷயத்தில் தமிழ்நாடு, கேரளா அரசுகள் மட்டும் இன்றி மத்திய அரசும் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் யானை பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அவற்றை மீட்க வேண்டும்.

யானைகள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியே வராத அளவிற்கு அவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு வகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் எதிர்காலத்தில் யானைகளின் எண்ணிக்கை குறைவதை கட்டுப்படுத்த முடியும் இல்லையேல் இந்தியாவில் யானை என ஒரு இனம் இருந்தது இப்போது அது இல்லை என்று சொல்லக்கூடிய நிலை தான் ஏற்படும். காரணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற விலங்குகள் இப்படிதான் அழிந்து போயிருக்கின்றன. ஆதலால் யானைகளை பாதுகாக்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் சமூக பொறுப்பு ஆகும்.

Updated On: 14 Oct 2022 6:55 AM GMT

Related News