/* */

மின்சார கட்டண உயர்வு: சிறு,குறு தொழில் சங்கத்தினர் வேதனை

மின்சார கட்டண உயர்வால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதோடு, தொழிலை நலிவடைய செய்வதாக கோவை மாவட்ட சிறு குறு தொழில் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

மின்சார கட்டண உயர்வு:  சிறு,குறு தொழில் சங்கத்தினர் வேதனை
X

கோவை கொடிசியா அலுவலகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறுகுறு தொழில் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுது அப்போது பேசிய தொழில் சங்கத்தின் கொடிசியா தலைவர் திருஞானம் கூறியதாவது:

தற்போது மின் கட்டணத்தை 17மடங்கு உயிர்த்தியுள்ளதால் சிறுகுறு தொழில்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 17சதவீதம் மின்சார கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ,இதனால் தமிழக அரசு புதிய மின் திட்டத்தை ரத்து செய்து பழைய நடைமுறை மின்சார கட்டணத்தை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே போல பீக் ஹவரான 8 மணி நேரத்திற்கு தொழிற்சாலைகளுக்கு 25சதவீதம் கூடுதல் மின் கட்டணம் போடபட்டுள்ளதால் சிறுகுறு தொழிற்சாலைகள் கூடுதல் நிதிச்சுமை அடைந்து நஷ்டம் ஏற்படுவதாகவும்,தெரிவித்தனர்.

மேலும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதால்,ஏற்கனவே போக்குவரத்து செலவு உள்ளதால், தற்போது மின் கட்டணமும் அதிகமானால் தங்கள் உற்பத்தி செய்ய கூடிய பொருளின் செலவு மிகவும் அதிகரிப்பதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்த பொருட்களின் விலை உயர்வால் ,வெளி மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் படையெடுப்படுதாகவும்,இங்கு உள்ள உற்பத்தியாளர்கள் தங்களது ஆர்டர்களை இழக்க நேரிடுவதாக வேதனை தெரிவித்தனர்

Updated On: 8 Aug 2022 4:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  8. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  9. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...