/* */

கோவையில் கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது

Latest Crime News In India- கோவையில் கஞ்சா சாக்லெட் விற்பனை அமோகமாக நடக்கிறது. போலீசார், கஞ்சா வியாபாரியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

கோவையில் கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது
X

போலீசார் சோதனையில் பிடிபட்ட கஞ்சா சாக்லெட் பொட்டலங்கள்.

Latest Crime News In India- கஞ்சாவை துாளாக்கி, சாக்லெட் வடிவில் கஞ்சா உருண்டையாக தயாரித்து சிறு சிறு சாக்லெட் பைக்குள் அடைத்து கஞ்சா சாக்லெட் தயாரிக்கின்றனர். டீக்கடை , பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் வைத்து கஞ்சா வியாபாரிகள் விற்கின்றனர். இதுகுறித்து போலீசார் அவ்வப்போது அதிரடி ரெய்டு நடத்தி, கஞ்சா வியாபாரிகளை கைது செய்கின்றனர்.

ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார், கண்ணப்ப நகர், சங்கனுார் பகுதியில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் மூட்டையில் கஞ்சா சாக்லெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. பிடிபட்ட நபரின் பெயர் பாலாஜி, காய்கறி மார்கெட்டில் கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில், உத்தரபிரதேசத்தில் கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு கோவைக்கு ரயில் மற்றும் லாரிகளில் கடத்தி வரப்படுகிறது. கஞ்சா சாக்லெட்டை விரும்புவோருக்கு அவர்கள் கூறுகிற இடங்களுக்கே சென்று டெலிவரி தரப்படுகிறது .வடமாநில தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட்டுகள் அதிகமாக விற்கப்படுகிறது. கஞ்சா சாக்லெட்டை 50, 100 ரூபாய் என விற்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.

இளையசமுதாயத்தை போதைக்கு அடிமையாக்கும் கஞ்சா சாக்லெட் விற்பனையை ஒழிக்க, போலீசார் கஞ்சா வியாபாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 4:39 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?