/* */

திரௌபதி முர்மு வெற்றி: கோவையில் பா.ஜ.க.மகளிர் அணியினர் கொண்டாட்டம்

ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி அடைந்ததையொட்டி கோவையில் பா.ஜ.க.மகளிர் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

திரௌபதி முர்மு வெற்றி: கோவையில் பா.ஜ.க.மகளிர் அணியினர் கொண்டாட்டம்
X

ஜனாதிபதி தேர்தலில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதையொட்டி கோவையில் பா.ஜ.க. மகளிர் அணியினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்தியாவில் 15 வது குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.எஸ்.புரத்தில் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தை தொடங்கினர். பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேசிய மகளிரணி தலைவரும் , தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தை துவங்கினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் சமூக நீதி என்பது வெறும் வார்த்தை அல்ல எனவும் சொல்லாடல் அல்ல எனவும் அதனை ஒவ்வொரு செயலிலும் செயல்படுத்தக்கூடிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளதாக தெரிவித்தார். ஒடிசாவில் மிகச் சிறிய கிராமத்தில் பிறந்து பெண்களும் கல்வி கற்க முடியும் என்பதை நிரூபித்து தன்னுடைய கடுமையான உழைப்பினாலும் கடைக்கோடி கிராமத்தின் உடைய பெண்மணியை நாட்டின் முதல் குடிமகளாக பார்க்க முடியும் என்கின்ற சூழ்நிலையை பா.ஜ.க. உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்நாட்டில் அனைவரும் காண வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அனைவருக்கும் ஆன சம வாய்ப்பு என்பதை நிலை நிறுத்துகின்ற கட்சியாக பா.ஜ. கட்சியும் பிரதமரும் உள்ளனர் என்பதை தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் கோவையிலும் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றி கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வெற்றி கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் கூறினார். குறிப்பாக பழங்குடி இன மக்கள் வாழும் கிராமங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். எங்களுக்கு எதிராக நின்ற வேட்பாளர் தங்களை எட்ட முடியாத அளவிற்கு தாங்கள் முன்னிலையில் இருப்பதாக கூறிய அவர் தேர்தலுக்கு முன்பாகவே கூட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக்கு வெளியில் இருக்கின்ற கட்சிகளும் கூட மிகப் பெரிய ஆதரவினை தங்களுடைய வேட்பாளர்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 22 July 2022 5:24 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!