/* */

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் பயிற்சி

பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பேரிடர் பயிற்சி
X

கோவை மாவட்ட ஆழியாறு அணைப்பகுதியில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி பெறும் மத்திய ரிசர்வ் படை போலீஸார்

கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சி பள்ளி முதல்வரும், ஐ.ஜி. ஸ்ரீஅஜய் பரதன் உத்தரவின் பேரில் துணை கமாண்டன்ட் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுவாசமாலா, கோஷ், நேபால் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், பயிற்சியாளர்கள் கலந்துகெண்டு பயிற்சி அளித்தனர்.

மேலும் டிரம், கேன், மரத்துண்டுகளை கொண்ட படகை தயார் செய்து, அணையின் மைய பகுதிக்கு கொண்டு சென்று நீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருவது மற்றும் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்று தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். 60 மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு, 11 பேர் பயிற்சி அளித்தனர். இதை அணையில் நின்றவாறு சுற்றுலா பயணிகள் பார்த்தனர். இதையொட்டி அணை பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மத்திய ரிசர்வ் படை போலீசார் கூறியதாவது:புதிதாக பணியில் சேரும் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் புயல், நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி ஒத்திகை அளிக்கப்பட்டது என அவர்கள் கூறினர்.


Updated On: 13 Aug 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  2. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  3. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  6. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  7. சுற்றுலா
    ஊட்டிக்கு இ-பாஸ்: படிப்படியான வழிகாட்டி!
  8. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  9. வீடியோ
    🔴LIVE : ஈழத் தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் ! இலங்கை ஜெய...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்