/* */

அதிமுக உள்விவகாரங்களில் கருத்து சொல்வது சரியாகாது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். சசிகலா வருகை குறித்த விவகாரத்தை அந்த கட்சிக்குள் தான் பேசிக் கொள்கின்றனர்.

HIGHLIGHTS

அதிமுக உள்விவகாரங்களில் கருத்து சொல்வது சரியாகாது: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
X

நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த அண்ணாமலை.

பாஜக சார்பில் கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட ஆழப்புழா மாவட்டத்திற்கு கோவையில் இருந்து சுமார் 6 லட்ச ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. அந்த வாகனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களின் உள் விவகாரங்களில் குறித்து இந்த நேரத்தில் நான் கருத்து சொன்னால் அது தவறாக இருக்கும் என கூறினார். யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். சசிகலா வருகை குறித்த விவகாரத்தை அந்த கட்சிக்குள் தான் பேசிக்கொள்கின்றனர். அதில் உள்ளே புகுந்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என தெரிவித்தார்.

நமது அம்மா நாளிதழ் அண்ணாமலையை பாராட்டி எழுதி இருப்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், யார் திட்டினாலும், பாராட்டினலும் ஆதாரங்களோடு திட்டுங்கள், பாராட்டுங்கள் என பதிலளித்தார். திமுகவை பா.ஜ.வும் சரி, அதிமுகவும் சரி விமர்சனம் செய்கிறது. அதிமுகவில் இருந்து இபிஎஸ் கூட சமீபத்தில் திமுகவை கண்டித்து அறிக்கை கொடுத்து உள்ளார். பாஜக ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுகிறது எனவும் கூறினார். எந்த குழப்பமும் இல்லாமல் மக்கள் பிரச்சினையை அரசிடம் கொண்டு சொல்கின்றோம். சில இடங்களில் நாங்கள் சொல்வதை தமிழக முதல்வரும் செவி சாய்த்து கேட்டுக்கொள்கின்றார் எனவும் எடுத்துக்காட்டாக கோவில்களை திறப்பது, ஆவின் டெண்டர் போன்றவற்றை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக பேசுவது எல்லாம் பா.ஜ.கவை எதிர்த்துதான் எனவும் அப்படி இருக்கும் போது திமுக பா.ஜ.க இடையேதான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுவதாகவும், அதிமுக தமிழகத்தில் இருந்து கருத்துகளை முன் வைக்கின்றனர். இந்தியா சார்பில் இருந்து பாஜக கருத்துகளை தெரிவிக்கின்றது என தெருவித்தார். கருத்தியல் அரசியல் பாஜக, திமுக இடையேதான் நடக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் யார் எதிர்கட்சி என்பதில் அதிமுக, பாஜகவிடையே போட்டி இல்லை என்றும், ஒன்றாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் PPAவில் ஊழல் நடக்க போகின்றது, அதை சுட்டி காட்டிகின்றோம் என்றும் அமைச்சர் முதலில் அவர் வீட்டை சுத்தம் செய்துவிட்டு கேட்கட்டும், பதில் சொல்கின்றேன் எனவும் தெரிவித்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயில் இருந்தே ஆதாரம் வரும், என தெரிவித்த அவர், திமுக பாஜக இடையே கருத்து மோதல்கள் நடைபெறவில்லை எனவும், கொடுத்த ஆதாரங்களுக்கே இதுவரை பதில் வரவில்லை எனவும் தெரிவித்தார். ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை என தெரிவித்த அவர், முதல்வர் மின்துறை மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

Updated On: 25 Oct 2021 3:30 PM GMT

Related News