/* */

கோவையில் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள்!

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி கோவை ஆலாந்துறை பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோவையில் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள்!
X

கோவை ஆலாந்துறை பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனம் மூலம் விநியோகிக்கப்படும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் விலையை அதிகரிக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், கோவை மாவட்ட விவசாய சங்கம் இணைந்து பால் விலையை உயர்த்த கோரியும் ஜந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாபெரும் அடையாள கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிறுவாணி சாலை ஆலந்துறை, நாதேகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்ட கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், மாட்டு தீவன மானியத்தை வழங்க வேண்டும், பால் விலையை உயர்த்திட வேண்டும், ஊக்கத்தொகையை வழங்கிட வேண்டும் எனக் கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கல் கொண்டு வந்த 150 லிட்டர் பாலை அவர்கள் சாலையில் கொட்டி எதிர்பை தெரிவித்தனர்.

பால் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ. 50 நிர்ணயம் செய்ய வேண்டும், கலப்பு தீவனத்திற்கு மானியம் வழங்க வேண்டும். சங்க பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கால்நடைகளுக்கு காப்பீடு முழுமையாக வழங்க பால் உற்பத்தியாளர்கள் வருடாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பால் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி விடுவதாக விவசாயிகள் எச்சரித்து உள்ளனர்.

இதுதொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

மாடு ஒன்றுக்கு பராமரிப்பு செலவு ஒரு நாளைக்கு 250 ரூபாய் வரை ஆகிறது. நஷ்டத்திற்கு இடையே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் பாலகம் உற்பத்தி லாப தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை எதுவுமே கொடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநில அரசு வழங்குவதுபோல, தமிழக அரசும் நல்ல ஒரு முடிவை எடுத்து கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். கொள்முதல் விலையை உயர்த்த வில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

Updated On: 19 March 2023 2:04 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  2. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  3. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  4. கோவை மாநகர்
    பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...
  5. இந்தியா
    டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
  6. காஞ்சிபுரம்
    உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய்...
  7. சினிமா
    தலைவர் 171 ஷூட்டிங் எப்ப தொடங்குது தெரியுமா?
  8. ஈரோடு
    நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சி : கனிமொழி பேச்சு..!
  9. சினிமா
    தலைவர் 171 இப்படிப்பட்ட படமா? வில்லன் யார் தெரியுமா?
  10. வீடியோ
    பிரதமர் Modi-யை மிரட்டி பணிய வைக்க முடியுமா ? #modi #pmmodi...