/* */

முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த திட்டத்தை கைவிட்ட கோவை மாநகராட்சி

அரசு நிதி ஒதுக்கியும் கூட, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்காத ஒரே காரணத்தால், அத்தொகை அரசுக்கே திரும்பி செல்கிறது.

HIGHLIGHTS

முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த திட்டத்தை கைவிட்ட கோவை மாநகராட்சி
X

சங்கனூர் பள்ளம் திட்டப் பணிகள் 

2014ல் மேயர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு ஜெ.,வந்தபோது சங்கனூர் பள்ளம் கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, அவிநாசி ரோடு, திருச்சி ரோட்டை இணைக்கும் வகையில், 7 மீட்டர் அகலத்தில் வழித்தடம் ஏற்படுத்தும் வகையில், 11.5 கி.மீ., துாரத்துக்கு அரை வட்டச்சாலை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார்.

போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் அ.தி.மு.க., ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அரசியல் வேறுபாடு பார்க்காமல், இத்திட்டத்துக்கு உயிரூட்டப்பட்டது.

கடந்தாண்டு, நவம்பரில் வ.உ.சி., மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர், 587.91 கோடி ரூபாய்க்கு முடிவுற்ற, 70 திட்டங்களைத் துவக்கி வைத்தார். ரூ.89.73 கோடி மதிப்பள்ள, 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதில், மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து சத்தி ரோடு வரை, ரூ.49 கோடியில் சங்கனுார் பள்ளத்தை, 2,300 மீட்டர் நீளத்துக்கு துார்வாரி, கரையை பலப்படுத்தும் திட்டமும் ஒன்று.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், போதிய அக்கறை காட்டாமல், 300 மீட்டருக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தனர். அதில், ஒரு கோடி ரூபாய் செலவில், 200 மீட்டர் துாரத்துக்கு கருங்கற்கள் அடுக்கப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது.

ஆனால், கரையை ஒட்டி, 2,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் இருக்கின்றன. அங்கு வசிப்போருக்கு மாற்று வீடு வழங்கி, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வசம், போதுமான வீடுகள் தற்போது இல்லாத காரணத்தால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது, சங்கனூார் பள்ளத்தில் வேறொரு இடம் தேர்வு செய்து, கரையைப் பலப்படுத்த, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இது தொடர்பாக, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசித்தபோது, 'ஏற்கனவே ஒப்புதல் பெற்ற இடத்தில் மட்டுமே பணி செய்ய வேண்டும்; வேறிடத்துக்கு நிதியை செலவழிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அதனால், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சங்கனூர் பள்ளம் கரையில் உள்ள, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த திட்டத்தை, மாநகராட்சி கைவிட்டுள்ளது. இதற்காக ஒதுக்கிய நிதி, அரசுக்கே திரும்பிச் செல்கிறது.ஆனால், வேறொரு இடம் தேர்வு செய்து, புதிதாக திட்ட அறிக்கை சமர்ப்பித்து, நிதியை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

Updated On: 10 Dec 2022 6:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!