/* */

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது வழக்குப்பதிவு

மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார்.

HIGHLIGHTS

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது வழக்குப்பதிவு
X

பெரிய கடை வீதி காவல் நிலையம்.

கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். நகை பட்டறை தொழிலாளியான இவருடைய மனைவி புண்ணியவதி. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் புண்ணியவதி மீண்டும் கர்ப்பமானதால் 4வது குழந்தை என்பதால் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான அவர், மருத்துவமனைக்கு செல்ல விருப்பம் இல்லாமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல், வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால் ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஆனால் தொப்புள்கொடி சரியாக அறுபடாமல், பிரசவமும் சரியாக இல்லாததால் குழந்தையும், தாயும் மயங்கினர். அப்போது அங்கு வந்த குடும்பத்தினர் 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசுக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சரியாக பிரசவம் பார்க்காதால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்த பெரியகடை வீதி காவல்நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315 (குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Updated On: 7 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  3. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  4. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  6. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  7. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  9. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  10. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?