/* */

கோவையில் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

கோவையில் தனியார் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கோவையில் பள்ளி  பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
X

கோவையில் தனியார் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒட்டினார்.

44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் ஸ்டிக்கரை பேருந்தின் முன்புறம் ஒட்டினார்.

அப்பேருந்துகளில் ஒரு புறம் தமிழில் "நம்ம சென்னை, நம்ம செஸ் என்றும் நம்ம செஸ் நம்ம பெருமை என்ற வாசகமும் மாமல்லபுர கோவிலும் மற்றொரு பக்கம் ஆங்கிலத்தில் "NAMMA CHESS NAMMA PRIDE" என்ற வாசகமும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையும் இரு பக்கங்களிலும் முதல்வரின் புகைப்படம் செஸ் ஒலிம்பியாட் 2022 லோகோ வும் அச்சிடப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் இது போன்று ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது அதில் இரண்டு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் என்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Updated On: 22 July 2022 6:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  3. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  4. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  6. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  8. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  9. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  10. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்