/* */

கோவையில் பள்ளத்துக்குள் சிக்கி கொண்ட தனியார் பஸ்

கோவை இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்துக்குள் தனியார் பஸ் சிக்கிக் கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோவையில் பள்ளத்துக்குள் சிக்கி கொண்ட தனியார் பஸ்
X

கோவையில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டி பள்ளத்துக்குள், சிக்கிக்கொண்ட தனியார் பஸ்.

கோவை இடையார்பாளையம் அருகே, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்துக்குள், தனியார் பஸ் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை தடாகம் சாலையில், சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பிரதான மாநில நெடுஞ்சாலையான, தடாகம் சாலை தோண்டப்பட்டு பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளியின் வாசலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு, குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது.

ஆனால் அந்த பள்ளம் குறித்த எந்த அறிவிப்பும் அங்கு வைக்கப்படவில்லை. இந்நிலையில், அவ்வழியாக வந்த தனியார் பஸ், எதிர்பாராத விதமாக பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். பஸ்சை கிரேன் மூலம் மீட்கும் பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது.


தடாகம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளால், ஏற்கனவே அப்பகுதியில் கடும் தூசி பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த சாலை கடுமையாக சேதமடைந்து காணப்படும் நிலையில், தற்போது குடிநீர் குழாய் பணிகளும் தொடர்வதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

பஸ் பள்ளத்துக்குள் சிக்கியதை அடுத்து, தடாகம் சாலையில் வாகன போக்குவரத்தை அப்பகுதி மக்களே மாற்றியமைத்து, வாகனங்களை திருப்பி விடுகின்றனர். இதுவரை போலீசாரோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Sep 2022 10:37 AM GMT

Related News