/* */

தமிழக கல்லூரிகளில் ரூ. 202 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு...

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ரூ. 202 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தமிழக கல்லூரிகளில் ரூ. 202 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு...
X

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று காணொலி காட்சி மூலம் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 202 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டப்பட்டுள்ளன. வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், விடுதிகள். மின்னணு நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த படி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் 8 கோடியே 21 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம், சென்னை பாரதி மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சென்னை ராணிமேரி கல்லூரியில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறை தொகுதி கட்டடங்கள், சென்னை ஆர்.கே.நகர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 3 கழிவறை கட்டடங்கள், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கம் ஆகியவை திறக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசு பலவகை கல்லூரிக்கு 20 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்விசார் கட்டடம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் மற்றும் 8 ஆய்வகக் கட்டடங்கள், குளித்தலை

அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள் ஆகியவை இன்று திறக்கப்பட்டன.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 வகுப்பறைகள், 1 நவீன வகுப்பறை மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 6 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், மன்னார்குடி மன்னை ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை தொகுதி கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டன.

இதேபோல, ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை தொகுதி கட்டடங்கள், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 21 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம், பொது கருவியாக்கல் ஆய்வகம், கழிவறை தொகுதிகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை இன்று திறக்கப்பட்டன.

திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6

கழிவறை தொகுதிக் கட்டடங்கள், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி, வ.செ.சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், மின்னணு நூலகம், 2 பணியாளர் அறைகள், 4 கழிவறை தொகுதிகள் மற்றும் தரக் கட்டடங்கள் இன்று திறக்கப்பட்டன.

சிவகங்கை-அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 5 கழிவறை தொகுதி கட்டடங்கள், மதுரை, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியவை இன்று திறக்கப்பட்டன.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைக் கட்டடங்கள், ராமநாதபுரம், சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்கள் ஆகியவை இன்று திறக்கப்பட்டன.

ராமநாதபுரம், அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்டடங்கள் என தமிழகம் முழவதும் மொத்தம் 202 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை சார்ந்த கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லட்சுமிபிரியா, உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, கல்லூரி கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jan 2023 6:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!