/* */

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழிக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழி பகுதி மக்களை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை செல்கிறார்.

HIGHLIGHTS

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழிக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
X

முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து ஏரி, குளங்கள் பெரும்பாலும் நிரம்பி இருந்தன. இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதால் தமிழகம் முழுவதும் நவம்பர் 10ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பின்படி நவம்பர் 10ஆம் தேதி இரவு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியது. 11ஆம் தேதி தமிழக முழுவதும் அடை மழை கொட்டி தீர்த்தது. தலைநகர் சென்னையில் பலத்த மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து மழை பெய்தது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது. நேற்று இரவு பூந்தமல்லி பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்றும் தொடர்ந்து சென்னையில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் நேற்று முன்தினம் 24 மணி நேரம் பலத்த மழை பெய்தது. ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் சீர்காழி நகரமே வெள்ளக்காடானது. சுற்றுவட்டார கிராமங்களும் நீரில் மிதந்தன. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 44 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அது மேக வெடிப்பாக இருக்குமோ என்று ஐயம் ஏற்பட்டது. ஆனால் சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் சீர்காழியில் பெய்த மழை மேக வெடிப்பினால் ஏற்பட்டது அல்ல என்று விளக்கம் அளித்தார். ஆனாலும் 122 ஆண்டுகளுக்கு பின்னர் இப்படி ஒரு மழை அங்கு பெய்ததாக அவர் தனது கருத்தினை பதிவு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதியில் தமிழக அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது. இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் குறிப்பாக 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழையால் சீர்காழியில் இதுவரை தண்ணீர் தேங்காத குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று இரவு ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு சீர்காழிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Nov 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. திருவள்ளூர்
    புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
  4. சினிமா
    Thalaivar 171 Villain யாரு தெரியுமா? அட பெரிய நடிகராச்சே..!
  5. கன்னியாகுமரி
    ஒரே நேரத்தில் சூரியஅஸ்தமனம், சந்திரோதயம்! காணக் கிடைக்காத அபூர்வ...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக அதிகரிப்பு..!
  7. இந்தியா
    நாட்டின் பணக்கார முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி! சொத்து மதிப்பு ஜஸ்ட்...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன‌ அடியாக நீடிப்பு
  10. தமிழ்நாடு
    கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!