மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியர் பிறந்த நாளில் முதல்வர் மரியாதை

நாளை (16.09.2021) காலை 9.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள்.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியர் பிறந்த நாளில் முதல்வர் மரியாதை
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்காகப் பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த இராமசாமி படையாட்சியர் பிறந்த நாளினை முன்னிட்டுச் சென்னை, கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாளை (16.09.2021) காலை 9.00 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள். அவரது நினைவாக கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.

தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில், அவர்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்னாற்காடு மாவட்டத்தில் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16ஆம் நாள் பிறந்த இராமசாமி படையாட்சியார், சிறுவயது முதற்கொண்டே சமுதாயப் பணிகளில் மிகவும் நாட்டம் கொண்டு அதன் தொடர்ச்சியாக உழைப்பாளர் கட்சி' என்கின்ற அரசியல் கட்சியையும் நிறுவி அதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமின்றி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காவும், தான் சார்ந்த சமுதாய மக்களின் சமூக நீதிக்காகவும் போராடியவர். மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த மறைந்த இராமசாமி படையாட்சியார் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். தான் சார்ந்த மிகவும் பின்தங்கிய வன்னியர் சமுதாயத்திற்கு மாநிலத்திலும் மத்தியிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்று இறுதி வரை போராடியவர். மக்களுக்காக வாழ்ந்து மறைந்தார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் மணிமண்டபமும் திருவுருவச் சிலையும் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றுகின்ற வகையிலும் மிகவும் பின்தங்கிய வன்னியர் சமுதாய மக்கள் ஏற்றம் பெற்றிட முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவித இட ஒதுக்கீடு வழங்கினார். மேலும் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிர்நீத்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியோடு ஓய்வூதியமும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கினார்.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் சட்டமன்றப் பேரவையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்திற்கான 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டினைச் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தினார்.

மேலும் 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிகளின் தியாகத்தினைப் பெருமைப்படுத்துகின்ற வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Updated On: 15 Sep 2021 12:41 PM GMT

Related News