/* */

chief minister health insurance card download-தமிழக அரசின் காப்பீடு அட்டை download பண்றது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!

chief minister health insurance card download-ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு ஏற்படுத்திய திட்டமே இந்த மருத்துவ காப்பீட்டுத்திட்டம்.

HIGHLIGHTS

chief minister health insurance card download-தமிழக அரசின் காப்பீடு அட்டை download பண்றது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
X

chief minister health insurance card download- தமிழகத்தில் ஒருசில அரசு மருத்துவமனைகளைத் தவிர,தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே எல்லா மருத்துவ சிகிச்சைகளும் பெறக்கூடிய வசதிகள் உள்ளன. தனியார் ஆஸ்பத்திரிகளில் உயர் சிகிச்சைகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் சாதாரண மக்களால் செலுத்த முடியாது. அதனால் ஏழை எளிய மக்களின் குடும்பங்களில் உயர் சிகிச்சைகள் பெறமுடியாமல் தவித்து வந்தனர்.

அதற்குத் தீர்வு கிடைக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தமிழக அரசு அந்த திட்டத்தை கொண்டுவந்தது.

இப்போ விஷயத்திற்கு வருவோம் நீங்கள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்திற்கான (cmchistn) அட்டையை பெற்றுவிட்டீர்களா? அதை இன்னும் Download செய்யவில்லையா? கவலை வேண்டாம். மருத்துவ காப்பீட்டு அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்யணும் என்று பார்ப்போம் வாங்க.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் (Chief Minister Comprehensive Health Insurance Scheme – CMCHISTN) ஏழை,எளிய மக்கள் எந்த கட்டணமும் இல்லாமல் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை பெறுவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.


அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வருவாய் குறைந்த குடும்பங்கள் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை கட்டணமில்லாமல் பெற முடியும். தமிழக அரசு இந்த சுகாதாரத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தி வருகிறது.

இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் அதிகபட்சமாக Rs. 5,00,000 வரையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் 1027 சிகிச்சை முறைகளும், 154 தொடர் சிகிச்சை முறைகளும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்புகளும் உள்ளன. இதில் பச்சிளங் குழந்தைளுக்கான சிகிச்சை முறைகளும் அடங்கும்.

காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் நோய்கள் மற்றும் சிகிச்சைகள்

முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் கீழே பட்டியலிடப்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அந்த நோய்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

chief minister health insurance card download

  • CARDIOLOGY இருதய நோய் சிகிச்சை
  • CARDIOTHORACIC SURGERIES இருதய நோய் அறுவை சிகிச்சை
  • DERMATOLOGY தோல் நோய் சிகிச்சை
  • Diagnostic center நோய் கண்டறிதல் மையம்
  • E N T காது மூக்கு தொண்டை சிகிச்சை
  • Emergency Room Packages (Care requiring less than 12 hrs stay) அவசர சிகிச்சைகள்
  • ENDOCRINE SURGERY நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை
  • ENDOCRINOLOGY உட்சுரப்பி சிகிச்சை
  • FOLLOW UP PROCEDURE பின் தொடர் செயல்முறை
  • GASTROENTEROLOGY இரைப்பை குடல் சிகிச்சை
  • GENERAL MEDICINE பொது மருத்துவ சிகிச்சை
  • GENERAL SURGERY பொது அறுவை சிகிச்சை
  • GENITOURINARY SURGERY இருபாலார் சிறுநீரக நோய் சிகிச்சை
  • GYNAECOLOGY OBSTETRIC SURGERY மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் சிகிச்சை
  • HEMATOLOGY இரத்தவகை சிகிச்சை
  • HEPATOLOGY கல்லீரல் நோய் சிகிச்சை
  • INFECTIOUS DISEASES – GENERAL MEDICINE தொற்று நோய் சிகிச்சை
  • INTERVENTIONAL CARDIOLOGY இடையீடு இருதயவியல்
  • INTERVENTIONAL RADIOLOGY இடையீடு இருதய சிகிச்சை
  • MEDICAL ONCOLOGY புற்றுநோய் மருத்துவ சிகிச்சை
  • NEONATOLOGY பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை
  • NEPHROLOGY சிறுநீரக சிகிச்சை
  • NEUROLOGY நரம்பியல் சிகிச்சை
  • NEUROSURGERY நரம்பியல் அறுவை சிகிச்சை
  • OFMS வாய் வழி மற்றும் தாடை அறுவை சிகிச்சை
  • OPHTHALMOLOGY SURGERIES கண் நோய் அறுவை சிகிச்சை
  • ORTHOPEDIC TRAUMA எலும்பியல் காயம்
  • PAEDIATRIC INTENSIVE CARE இளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை
  • PAEDIATRIC SURGERIES குழந்தை அறுவை சிகிச்சை
  • PAEDIATRICS குழந்தைகள் சிகிச்சை
  • PLASTIC SURGERY ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
  • PMR
  • PSYCHIATRY மனநல மருத்துவ சிகிச்சை
  • PULMONLOGY நுரையீரல் சிகிச்சை
  • RADIATION ONCOLOGY கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை
  • RHEUMATOLOGY முடக்கு வாதம் சிகிச்சை
  • SPINE தண்டுவடம் சிகிச்சை
  • STEMI இருதய நோய் / மாரடைப்பு
  • SURGICAL GASTRO ENTEROLOGY இரைப்பை குடல் அறுவை சிகிச்சை
  • SURGICAL ONCOLOGY புற்றுநோய் அறுவை சிகிச்சை
  • THORACIC MEDICINE நெஞ்சக நோய் சிகிச்சை
  • VASCULAR SURGERIES இரத்தநாள அறுவை சிகிச்சை

chief minister health insurance card download


தகவல்

திட்டத்தின் பெயர் : முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம்

செயல்படுத்துபவர் : தமிழ்நாடு அரசு

அலுவலக வெப்சைட்: https://www.cmchistn.com

இலவச அழைப்பு எண் : 1800 425 3993

இ மெயில் : tnhealthinsurance@gmail.com

CMCHISTN : பயனாளி

ஆண்ட்ராய்டு ஆப் : https://play.google.com/store/apps/details?id=com.remedinet.tnbeneficiary

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை

CMCHISTN Smart Card பின்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

URN Number

Head of Family Member Name

Address

Family Group Photo


காப்பீட்டுத்திட்டத்தின் அட்டையை பதிவிறக்கம் செய்தல்

பின்வரும் படிகளை பின்பற்றி காப்பீடு அட்டையை Download செய்யலாம்.

Step 1: முதலில் www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: Enrollment என்பதற்கு கீழே உள்ள Member Search / e-Card என்பதை 'கிளிக்' செய்யவும்.

Step 3: உங்களின் Health Insurance Card இல் உள்ள URN Number அல்லது Ration Card Number இவை இரண்டில் ஏதாவது ஒன்றை உள்ளீடு செய்யவும்.

Ration Card Number என்பது 20G1234567 என்ற வடிவில் இருக்கும்.

பிறகு Search என்ற பட்டனை அழுத்தவும்.

Step 4: இப்பொழுது Policy Number இன் மீது 'கிளிக்' செய்யவும்.

Step 5: தற்போது Beneficiary Details தெரிவதை காண்பீர்கள். இப்பொழுது Generate e-card என்பதை அழுத்தவும்.

Step 6: இப்பொழுது Chief Minister Comprehensive Health Insurance Card தெரியும். அதை Download செய்து பிறகு கலர் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

Updated On: 9 Jan 2023 6:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?