சென்னையில் மரம் விழுந்து பெண் உயிரிழப்பு: மேயர் பிரியா விளக்கம்...!

சென்னை கே.கே. நகரில் மரம் சரிந்து விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இயற்கையானது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சென்னையில் மரம் விழுந்து பெண் உயிரிழப்பு: மேயர் பிரியா விளக்கம்...!
X

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.

சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் தூய்மை கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் பார்வையிட்டனர். விழிப்புணர்வு பேரணியை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், உறுதிஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை கே.கே.நகரில் மரம் விழுந்து பெண் உயிரிழந்ததற்கும், மழைநீர் வடிகால் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். 4 நாட்களுக்கு முன்னதாக பணிகளும் நிறுத்தப்பட்ட நிலையில் இயற்கையாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மரம் சரிந்துள்ளது எனவும் மேயர் பிரியா குறிப்பிட்டார். மேலும் சென்னை நகரில் உள்ள பழமையான மரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றும் அவர் பதில் அளித்தார்.

Updated On: 25 Jun 2022 1:35 PM GMT

Related News